கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு குலுக்கல் முறையில் பசுமாடு பரிசு… தாய்லாந்து அரசு புதிய முயற்சி..!

0 1972

தாய்லாந்து நாட்டில் மக்கள் தடுப்பூசி செலுத்துக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் குழுக்கள் முறையில் பசுமாடு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

சியாங் மாய்  மகாணம், மா சியேம் மாவட்டத்தில் இரண்டாவது வாரமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. செவ்வாய் கிழமை நடைபெற்ற குழுக்கள் முறையில் 65 வயதான இங்கம் தொங்காம் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு, ஒரு வயதுடைய பசுமாடு வழங்கப்பட்டது.

குழுக்கள் முறையில் வழங்கப்படும் பசுமாட்டை மறுவிற்பனை செய்யவோ, கொல்லவோ கூடாது. இதுவரை 27 பசுமாடுகள் குழுக்கள் முறையில் வழங்கப்பட்டுள்ளது. 6 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட தாய்லாந்து நாட்டில் இதுவரை 47 லட்சம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments