தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடுவது எப்படி?

0 14537

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடும் வழிமுறைகள் வகுக்க அமைக்கப்பட்ட குழு இரண்டு வாரங்களில் அரசிடம் அறிக்கை அளிக்க உள்ளது.

கொரோனா சூழலில் 12ஆம் வகுப்புத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கிடும் வழிமுறைகளை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு மதிப்பெண் கணக்கிடும் வழிமுறைகள் பற்றித் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீட்டு வழிமுறைகள் நாளை வெளியாக உள்ள நிலையில் அதையும் கருத்தில் கொண்டு முடிவெடுக்கப்பட உள்ளது. பத்தாம் வகுப்பு, 11ஆம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்கள், அகமதிப்பீட்டுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் கணக்கிடப்படும் எனக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments