பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 1706

தமிழக முதலமைச்சராக பதவியேற்றபின் மு.க.ஸ்டாலின் நாளை முதன்முறையாக டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்துப் பேசுகிறார்.

இதற்காக நாளை காலை 7.30 மணிக்கு சிறப்பு விமானத்தில் புறப்படும் முதலமைச்சர் காலை 10.30 மணிக்கு டெல்லியை அடைகிறார். பின்னர் அங்குள்ள தமிழ்நாடு இல்லம் செல்லும் முதலமைச்சருக்கு போலீசார் அணிவகுப்பு மரியாதை செய்கின்றனர். தொடர்ந்து தமிழ்நாடு இல்லத்தில் ஓய்வு எடுக்கும் மு.க.ஸ்டாலின் மாலை 5.30 மணிக்கு பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசுகிறார்.

அப்போது தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசி மற்றும் நீட் தேர்வில் விலக்கு குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளைமறுநாள் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரை சந்தித்துப் பேசிய பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்று மாலையே தமிழகம் திரும்புகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments