கொரோனா பரவல் காரணமாக வருகிற 30ந்தேதி வரை இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளின் பயணிகளுக்கு பிலிப்பைன்ஸ் அரசு தடை

0 2219

கொரோனா பரவல் காரணமாக இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளின் பயணிகளுக்கு  வருகிற 30ந்தேதி வரை தடை விதிக்கப்படுவதாக பிலிப்பைன்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அதிபரின் செய்தி தொடர்பாளர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இந்த தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நாடுகளுக்கு கடந்த 14 தினங்களுக்குள் பயணம் மேற்கொண்ட இதர நாட்டுப் பயணிகளும் பிலிப்பைன்ஸ் நாட்டிற்குள் நுழைய தடை தொடரும் என்று கூறியுள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments