கொரோனாவால் நடப்பாண்டிற்கான ஹஜ் பயணம் ரத்து

0 1215

கொரோனா பரவல் காரணமாக நடப்பாண்டு ஹஜ் பயணம் ரத்து செய்யப்படுவதாக இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து அனைத்து ஹஜ் பயண விண்ணப்பங்களும் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. முன்னதாக ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள இந்த ஆண்டில் முழுமையாக  தடுப்பூசி செலுத்திக்கொண்ட 60 ஆயிரம் பேருக்கு  மட்டுமே அனுமதி அளிக்க சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது.

மேலும் சவூதி அரேபியாவில் இருப்பவர்கள் மட்டுமே ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியும் எனவும் வெளிநாட்டினருக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments