உலகின் 9 நாடுகளில் அணு ஆயுதங்கள் இருப்பதாக சிப்ரி அமைப்பு ஆய்வறிக்கை

0 2521

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் தங்களிடமுள்ள அணு ஆயுதங்களை அதிகரித்து வருவதாக சர்வதேச அமைப்பான சிப்ரி தெரிவித்துள்ளது.

உலகில் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, இந்தியா, இஸ்ரேல், வடகொரியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 9 நாடுகளிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச  அமைதி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாத நிலவரப்படி, சீனாவிடம் 350ம், இந்தியாவிடம் 165ம், பாகிஸ்தானில் 156 அணு ஆயுதங்கள் உள்ளதாகக் கூறிய சிப்ரி அமைப்பு, பாங்காங் ஏரிக்கரையில் சீனாவுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பின்னர் இந்தியாவும், சீனாவும் பரஸ்பரம் அணு ஆயுதங்களை அதிகரித்து வருவதாகவும், இவ்விரு நாடுகளுக்கும் போட்டியாக பாகிஸ்தானும் அணு ஆயுதங்களை அதிகரித்து வருவதாகவும் சிப்ரி தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments