யூரோ கோப்பை கால்பந்துப் போட்டி: போர்ச்சுக்கல், பிரான்ஸ் அணிகள் வெற்றி

0 2807

யூரோ கோப்பை கால்பந்துப் போட்டியின் லீக் ஆட்டங்களில் போர்ச்சுக்கல் மற்றும் பிரான்ஸ் அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

யூரோ கால்பந்து தொடரில் ஹங்கேரி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் நட்சத்திர வீரர் ரொனால்டோவின் 2 கோல்கள் உதவியுடன் போர்ச்சுகல் அணி வெற்றி வாகை சூடியது. புதாபெஸ்ட் மைதானத்தில் நடந்த எப் பிரிவு லீக் ஆட்டத்தில் உள்ளூர் ரசிகர்களுக்கு மத்தியில் ஹங்கேரி அணியை, பலம் வாய்ந்த போர்ச்சுகல் எதிர்கொண்டது.

ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய போர்ச்சுகல் இறுதியில் 3-க்கு 0 என்ற கோல் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 கோல்கள் அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

 

தொடர்ந்து நடந்த மற்றொரு எப் பிரிவு லீக் ஆட்டத்தில் ஜெர்மனியை 1-க்கு 0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வீழ்த்தியது. உள்ளூர் ரசிகர் பட்டாளத்திற்கு மத்தியில் களமிறங்கிய ஜெர்மனி அணியில் வீரர்கள் சோபிக்க தவறினர். ஆட்டத்தின் 20-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் Mats Hummels கோல் திருப்பி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments