காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் : தமிழகம் உள்ளிட்ட தென்மாநில அதிகாரிகள் பங்கேற்பு

0 1237
காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் : தமிழகம் உள்ளிட்ட தென்மாநில அதிகாரிகள் பங்கேற்பு

டெல்லியில் காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் வரும் 22ஆம் தேதி காணொலி முறையில் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

இக்கூட்டத்தில் காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீர் திறப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தமிழக அரசின் சார்பில் குறுவை சாகுபடி குறித்து நீர்திறப்புக்கான கோரிக்கை முன்வைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments