சிறுமிகள் தன்னை தொட்டு பணிவிடை செய்தால் பவரை காட்டுவாராம் பாபா..! கிராபிக்ஸ் சாமியாரின் சாயம் வெளுக்கிறது

0 4678

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு, யாககுண்டம் மற்றும் தீபாராதனையில் எரியும் தீச்சுவாலையில் கடவுள் தெரிவதாகக் கூறி, கிராபிக்ஸ் போட்டோக்களை வைத்து பக்தர்களை வளைத்த, உடான்ஸ் சாமியார் சிவசங்கரன் செய்த சேட்டை வீடியோக்கள் வெளியாகி உள்ளன.  சிறுமிகள் தன்னைத் தொட்டால் பவர் கிடைப்பதாக கதை அளந்து விட்ட பாபா, தற்போது பவர் இழந்து மருத்துவமனையில் பதுங்கி இருக்கும் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

சென்னை கேளம்பாக்கத்தில் ஆசிரமம் நடத்தி தன்னை கடவுள் அவதாரம் என்று அளந்து விட்ட உடான்ஸ் சாமியார் சிவசங்கரபாபா, பள்ளிச் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட புகாரில் சிக்கியதால், போலீசுக்கு பயந்து டேராடூனில் உள்ள மருத்துவமனையில் பதுங்கி இருப்பதாகக் கூறப்படுவதால் அவரை பிடித்துவர சிபிசிஐடி போலீஸ் அங்கு விரைந்துள்ளது..!

கடந்த 30 வருடங்களுக்கு முன்பாக யாக குண்டம் மற்றும் தீபாராதனையில் எரியும் தீச்சுவாலையில் கடவுளர்களின் உருவம் தெரிவதாக கூறி கிராபிக்ஸ் போட்டோக்களை காட்டி பக்தர்களை வளைத்த சாமியார் சிவசங்கரன் அப்போதிருந்தே சிறுமிகளிடம் அத்துமீறுவதை வாடிக்கையாக செய்து வந்துள்ளார். குறிப்பாக தனக்கு வேண்டிய பதின்பருவ சிறுமிகளை கோபிகாக்கள் என்று கூறி ஆன்மீக பயணமாக வெளி மாநிலங்களுக்கு அழைத்துச்சென்றுள்ளார்.

அப்போது அவர்களிடம் தன்னை தொட்டால் பவர் கிடைக்கும் என்று கூறி அவர்களை தனது கால்களை அமுக்க வைத்து தன் உடல் முழுவதும் ஒளி முழுவதும் பரவிக்கிடப்பதாக கூறி சேட்டையில் ஈடுபட்டதை வீடியோ ஒன்றில் போட்டோ ஆதாரத்துடன் அவரே ஒப்புதல் வாக்குமூலம் போல கூறியுள்ளார்.

தன்னிடம் எனர்ஜி கொட்டிக் கிடப்பதாகவும் அதனை தன்னை நாடி வருபவர்களுக்கு வாரி வழங்குவதாகவும் தன்னிடம் இருக்கின்ற அளவுக்கதிகமான சக்தியை பக்தர்களுக்கு கொடுப்பதாகவும் 'தீப்பொறி திருமுகம்' போல கூறியுள்ளார் சிவசங்கரன்.

இப்படி ஏராளமான கிராபிக்ஸ் போட்டோக்களை காட்டி தன்னை ஒளிவடிவம் என்று தனது நெற்றிக்கு நடுவில் ஒளி இருப்பதாகவும் கதை அளந்து பக்தர்களை மூளைசலவை செய்து 64 ஏக்கர் ஆசிரமத்துக்கு அதிபதியான சிவசங்கர், மரங்கள் நிறைந்த அந்த இடத்தில் தனக்குத் தானே கோவில் கட்டி பெருமாள் போல தன்னை சிலையாக வைத்திருப்பதாக கூறப்படுகின்றது

நீண்ட காலமாக தனது பள்ளியில் படித்த பதின்பருவசிறுமிகளிடம் செய்து வந்த பாலியல் அத்துமீறல்கள் ஒவ்வொன்றாக அம்பலமானதைத் தொடர்ந்து பவர் இழந்த டம்மி பாபா தற்போது மருத்துவமனையில் பதுங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அவரைக் கைது செய்து விசாரித்தால் அவரால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் குறித்த முழு விவரங்களும், அவருக்கு கையாளாக இருந்த ஆசிரியைகளின் பெயர்களும் வெளிச்சத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments