முதலைக்கு தீனி போட பணம் பத்தல.! கிண்டி பாம்பு பண்ணை மூடல்?

0 8322
ஊர்வன விலங்குகள் குறித்து அறிந்துகொள்ள சென்னை கிண்டியில் தொடங்கப்பட்ட பாம்பு பண்ணை கொரோனா ஊரடங்கு காரணமாகப் பார்வையாளர்கள் இல்லாத காரணத்தால் வருமானமின்றி மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஊர்வன விலங்குகள் குறித்து அறிந்துகொள்ள சென்னை கிண்டியில் தொடங்கப்பட்ட பாம்பு பண்ணை கொரோனா ஊரடங்கு காரணமாகப் பார்வையாளர்கள் இல்லாத காரணத்தால் வருமானமின்றி மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஊர்வன விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி கல்விக்காக 1972-ம் ஆண்டு ரோமுலஸ் விட்டேக்கர் என்பவரால் தொடங்கப்பட்டது சென்னை கிண்டி பாம்பு பூங்கா. Chennai Snake Park trust-ன் கீழ் செயல்பட்டு வரும் இந்த பூங்காவில் முதலை, உடும்பு, ஆமை, பாம்பு வகைகள், பச்சோந்தி உள்ளிட்ட முக்கியமான ஊர்வன விலங்குகள் உள்ளன. இங்கு, நச்சுப் பாம்புகள் மற்றும் நச்சற்ற பாம்புகளை வளர்த்து இனப்பெருக்கம் செய்வதுடன் பாம்புகளிடமிருந்து மருத்துவப் பயன்பாட்டிற்காக நச்சுகளும் சேகரிக்கப்படுகின்றன.

சென்னை பாம்பு பூங்காவுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பள்ளி மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு வந்து செல்வார்கள்.

இவ்வாறு பல்வேறு வகைகளில் முக்கியத்துவம் பெற்ற சென்னை பாம்பு பண்ணை கொரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்தே மூடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருட காலத்தில் மட்டும் சுமார் 80 லட்சம் ரூபாய் அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கு வாழும் உயிரினங்களை பராமரிக்க போதுமான பணம் இல்லாததோடு, பண்ணை பராமரிப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கான ஊதியம் வழங்கப்படுவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

மிக மிக அரிய வகை இனங்களான கரியால் முதலைகள், இகுவானாக்கள், ஆமைகள், வெவ்வேறு வகையான பாம்பினங்கள் உள்ளிட்ட 300 வகையான உயிரினங்களுக்கு தேவையான ஊட்டச்சத்தான உணவு வழங்கக்கூட நிதியில்லாத நிலையும் உருவாகியுள்ளது.

உயிரினங்களின் உணவு மற்றும் பராமரிப்பு செலவாக மாதம் 8 லட்சம் செலவாகும் எனக் கூறும் பண்ணை நிர்வாகத்தினர், 50 வருடத்திற்கும் மேல் சிறப்பாக இயங்கி வந்த கிண்டி பாம்பு பண்ணை வருவாயின்றி தற்போது நிரந்தரமாக மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மேலும், கிண்டி பாம்பு பூங்காவை மீண்டும் உயிர்ப்புடன் செயல்படவைக்க தமிழக அரசும், முதலமைச்சரும் நிதியுதவி அளிக்க முன்வரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து கூறியுள்ள வனத்துறை அமைச்சர் ராம்ச்சந்திரன், பாம்பு பண்ணை மூடப்படுவதை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசு ஆலோசித்து முடிவெடுக்கும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments