சீதா கிங்ஸ்டன் தனியார் பள்ளியை இந்து சமய அறநிலையத்துறையே நடத்தும் - அமைச்சர் சேகர்பாபு

0 2903
சென்னை கீழ்ப்பாக்கத்தில் செயல்பட்டு வந்த சீதா கிங்ஸ்டன் தனியார் பள்ளியை இந்து சமய அறநிலையத்துறையே ஏற்று நடத்தும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் செயல்பட்டு வந்த சீதா கிங்ஸ்டன் தனியார் பள்ளியை இந்து சமய அறநிலையத்துறையே ஏற்று நடத்தும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

கீழ்ப்பாக்கத்தில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான 140 கோடி ரூபாய் மதிப்புடைய 32 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. இந்த நிலத்தில் தான் சீதா கிங்ஸ்டன் பள்ளி இயங்கி வந்தது.

இந்த நிலையில், மேற்கொண்டு வாடகை செலுத்த முடியாத காரணத்தினால் பள்ளியை மூடுவதாக பள்ளி நிர்வாகம் அறிவித்த நிலையில், அங்கு பயிலும் மாணவிகளின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் முறையிட்டிருந்தனர்.

இந்த நிலையில், பள்ளியில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேகர்பாபு, சீதா கிங்ஸ்டன் பள்ளியை இந்து சமய அறநிலையத்துறை ஏற்று நடத்தும் எனவும், இதற்கு முன் வசூலிக்கப்பட்ட கண்ணமே வசூலிக்கப்படும் எனவும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments