மிரட்டல் வழக்கில் ஜாமீன் பெற்ற யூடியூபர் சாட்டை துரைமுருகன் அவதூறு வழக்கில் மீண்டும் கைது..

0 5041
திருச்சியில் மிரட்டல் வழக்கில் கைதாகி ஜாமீன் பெற்ற யூடியூபர் சாட்டை துரைமுருகன், அவதூறு வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

திருச்சியில் மிரட்டல் வழக்கில் கைதாகி ஜாமீன் பெற்ற யூடியூபர் சாட்டை துரைமுருகன், அவதூறு வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனையும் சீமானையும் குறித்து அவதூறாக சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக, திருச்சியைச் சேர்ந்த கார் பழுது நீக்கும் மைய உரிமையாளர் வினோத் என்பவரை சாட்டை துரைமுருகனும் நாம் தமிழர் கட்சியைச் மூவரும் நேரில் சென்று மிரட்டியதாக போலீசில் புகாரளிக்கப்பட்டது.

இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நால்வருக்கும் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால் அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட மற்றொரு வழக்கில் சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments