தமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 11,805 பேருக்கு கொரோனா.. 267 பேர் பலி..!

0 3853
தமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 11,805 பேருக்கு கொரோனா உறுதியானது

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 12,000க்கும் கீழ் சரிந்தது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 11,805 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

செங்கல்பட்டை சேர்ந்த 28 வயது இளைஞர், திருப்பத்தூரை சேர்ந்த 27 வயது இளைஞர் உள்பட கொரோனா பெருந்தொற்றுக்கு மேலும் 267 பேர் பலியான நிலையில், ஒரே நாளில் 23,207 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் ஆகினர்.

தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1 லட்சத்து 25 ஆயிரத்து 215 ஆக குறைந்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1563ஆகவும், ஈரோட்டில் 1270 ஆகவும் உள்ளது. சென்னையில் மேலும் 793 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments