பிரதமரை சந்திக்க நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 2368
முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக நாளை டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை மறு நாள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச இருக்கிறார்.

முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக நாளை டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை மறு நாள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச இருக்கிறார்.

அப்போது 25-க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதலமைச்சர் வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தமிழகத்துக்கான கொரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டை அதிகரிக்கவும், கொரோனா தடுப்பு பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கவும் ஸ்டாலின் வலியுறுத்துவார் என கூறப்படுகின்றது.

இதுதவிர, நீட் தேர்வை ரத்து செய்யவும், ஜி.எஸ். டி. நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்கவும் முதலமைச்சர் கோரிக்கை வைப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments