மதுக்கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்து பா.ம.க. சார்பில் போராட்டம் - ராமதாஸ் அறிவிப்பு

0 3050
தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்தும், மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் நாளை மறு நாள் பா.ம.க. சார்பில் கருப்புக் கொடி ஏந்தி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாமல் பல லட்சக்கணக்கான மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் போது, மதுக்கடைகள் திறக்கப்பட்டிருப்பது மன்னிக்க முடியாதது எனக் குறிப்பிட்டுள்ளார்.

மதுக்கடைகளில் கொரோனா தடுப்பு வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனக் கூறியுள்ள ராமதாஸ், மதுக்கடைகளை திறக்க ஒரு நியாயமான சமூகக் காரணம் கூட கிடையாது எனவும் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments