நடிகர் சந்தானத்தின் உறவுக்காரப் பெண் வாகனம் ஏற்றிக் கொல்லப்பட்ட வழக்கு- கொலைக்கு மூளையாக செயல்பட்ட நபர் கைது

0 3595
நடிகர் சந்தானத்தின் உறவினர், சரக்கு வாகனம் ஏற்றிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், மூளையாக செயல்பட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நடிகர் சந்தானத்தின் உறவினர், சரக்கு வாகனம் ஏற்றிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், மூளையாக செயல்பட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த மாதம் 22ஆம் தேதி மதியம் திருவாரூரை அடுத்த தப்பளாம்புலியூரில், இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொன்டிருந்த ஜெயபாரதி என்ற இளம் பெண் சரக்கு வாகனம் மோதி உயிரிழந்தார்.

முதலில் விபத்து வழக்காக பதிவு செய்யப்பட்ட நிலையில், அமெரிக்காவில் பணிபுரியும் கணவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால், கூலிப்படையை ஏவி ஜெயபாரதியை கொலை செய்திருக்கலாம் என்று அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். உறவினர்கள் புகார் மற்றும் சந்தானம் முன்முயற்சியில் விசாரணை நடத்தப்பட்டு, திட்டமிட்ட கொலை என கண்டறியப்பட்டது. 

விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் உரிமையாளர், வாகனத்தின் ஓட்டுனர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்ட, அமெரிக்க மாப்பிள்ளை விஷ்ணு பிரகாஷின் மைத்துனர் செந்தில் குமார் கொரோனா சிகிச்சையில் இருந்ததால் கைது செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய செந்தில் குமாரை போலீசார் கைது செய்துள்ளனர். கொல்லப்பட்ட ஜெயபாரதியின் கணவர் விஷ்ணு பிரகாஷை, அமெரிக்காவில் இருந்து திருவாரூர் கொண்டுவரும் முயற்சியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments