பட்டப் பகலில் கடைக்காரரை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயற்சித்த இளைஞர்-பரபரப்பு சிசிடிவி காட்சி

0 2946

ராஜஸ்தானில் பட்ட பகலில் இளைஞர் ஒருவர் கடைக்காரரை நோக்கி துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

கோட்டா மாநிலத்திலுள்ள கும்ன்புரா நகரிலேயே இந்த துணிகர சம்பவம் நடந்துள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்களில் ஒருவர் வாகனத்திலிருந்து கீழிறங்கி தான் வைத்திருந்த துப்பாக்கியால் பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைக்காரரை நோக்கி சரமாரியாக சுட்டார்.

வாகனத்திலிருந்து கீழிறங்கிய மற்றொரு இளைஞர், துப்பாக்கிச்சூடு நடத்தியவரை தடுக்க முயற்சித்தார். அதிர்ஷ்டவசமாக அந்த கடை உரிமையாளருக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய 6 இளைஞர்களை தேடிவருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments