கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நிதியுதவி..!

0 4101

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் விஜய் சேதுபதி 25லட்சம் ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.

கொரோனா பேரிடரை எதிர்கொள்ள தாராளமாக நிதி வழங்கிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கையை ஏற்று தனிநபர், தொழில் நிறுவனங்கள் மற்றும் திரையுலகினர் என ஏராளமானோர் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதியும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 25லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்த விஜய் சேதுபதி நிவாரண நிதியை வழங்கினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments