கொரோனா பாதித்து, இணை நோயால் இறந்த பெற்றோரின் குழந்தைகளுக்கும் உதவி செய்வது குறித்து ஆலோசனை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

0 2200

கொரோனா பாதித்து, இணை நோயால் இறந்த பெற்றோரின் குழந்தைகளுக்கும் உதவி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா இறப்பு விசயத்தில் ஐசிஎம்ஆர் விதிகளின்படி இந்தியா முழுமைக்கும் ஒரே விதமான வழிகாட்டு நெறிமுறை பின்பற்றப்படுவதாக குறிப்பிட்டார்.

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்பை கட்டுப்படுத்துவது குறித்து 13 மருத்துவ வல்லுநர் குழு ஆராய்ந்து வருகிறது என்றும் மா.சுப்பிரமணியன் கூறினார். நீட் தேர்வு குறித்து 1 மாதத்திற்குள் நீதியரசர் ராஜன் குழு அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும், அதன் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments