பாலியல் புகாரில் சிக்கியுள்ள சிவசங்கர்பாபா தலைமறைவு - டேராடூன் விரைந்தது சிபிசிஐடி

0 2771

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிவசங்கர் பாபாவை தேடி சிபிசிஐடி தனிப்படை உத்ரகாண்ட் மாநிலம் டேராடூன் விரைந்துள்ளது.

சென்னை அடுத்த கேளம்பாக்கம் அருகே சுஷில் ஹரி இண்டர்நேஷ்னல் பள்ளியை நடத்தி வரும் சிவசங்கர் பாபா எனும் சாமியார், அங்கு பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சிவசங்கர் பாபா உத்ரகாண்ட் மாநிலம் டேராடூனில் ஒரு ஆசிரமத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதையத்து சிபிசிஐடி டிஎஸ்பி குணவர்மன் தலைமையிலான தனிப்படை டேராடூன் விரைந்துள்ளது. மேலும், சிவசங்கர் பாபா வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பவும் சிபிசிஐடி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments