முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்று தலைகுப்புற கவிழ்ந்த கார்... வீடியோ காட்சி

0 4364

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்ற கார், தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

வேர்கிளம்பியைச் சேர்ந்த அனில்குமார் என்பவர் தனது சகோதரி மற்றும் குழந்தையுடன் அதங்கோடு பகுதிக்கு மஹிந்திரா ஷைலோ காரில் சென்றுள்ளார்‍. மார்த்தாண்டம் மேம்பாலத்தில் முன்னே சென்ற வாகனத்தை இவரது கார் அதிவேகமாக முந்திச் செல்ல முயன்றுள்ளது.

அப்போது எதிரே ஒரு கார் வர, அதன் மீது மோதாமல் இருக்க வாகனத்தை திருப்பிய போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஷைலோ கார்,தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments