அம்பத்தூரில் போலீஸ் ஜீப் உட்பட வாகனங்கள் அடித்து உடைப்பு... குடிபோதை ஆசாமிகள் அட்டகாசம்..!

0 3218

சென்னை அம்பத்தூரில் போதை ஆசாமிகள் 6 பேர், போலீஸ் ஜீப் உள்ளிட்ட வாகனங்களை அடித்து உடைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஐசிஎப் காலனி குடிசை மாற்று வாரியக் குடியிருப்பைச் சேர்ந்த கோகுல் என்பவரை தாக்கிய இளைஞரை, போலீசார் மடக்க, அவனுக்கு ஆதரவாக திரண்ட அவனது நண்பர்கள், குடிபோதையில் போலீசாரின் வாகனத்தை கற்களைக் கொண்டு உடைத்ததாகக் கூறப்படுகிறது. அத்துடன் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த கார்,ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை அந்தக்கும்பல் அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளது.

சேதப்படுத்தப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் அம்பத்தூர் அருகே பதுங்கி இருந்த அந்த போதை ஆசாமிகள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments