திருச்சி முக்கொம்பையை இன்று அதிகாலை வந்தடைந்தது காவிரி நீர்

0 2232

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர்,இன்று அதிகாலை திருச்சி முக்கொம்பை வந்தடைந்தது.

டெல்டா மாவட்டங்களின் பாசன வசதிக்காக கடந்த 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 3000 கன அடி என்ற அளவில் திறக்கப்பட்ட நீர்,இன்று அதிகாலை திருச்சி முக்கொம்பை வந்தடைந்தது.

முக்கொம்பிலிருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் தண்ணீர் இன்று மாலை அல்லது இரவுக்குள் கல்லணையை வந்தடையும் என ஆற்று பாதுகாப்பு கோட்ட அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்‍.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments