மேற்கு வங்கத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு

0 2908

மேற்கு வங்கத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 1ம் தேதி வரை பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக பொதுப்போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது இ பாஸ் பெற்று பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. நடைப் பயிற்சிக்காக பூங்காக்கள் காலை 9 மணி வரை திறக்கப்பட்டிருக்கும் என்றும், அனைத்து கடைகளும் காலை 7 மணி முதல் 11 மணி வரை திறக்கவும் மாநில அரசு அனுமதியளித்துள்ளது.

உணவகங்கள் மற்றும் பார்கள் நண்பகல் முதல் இரவு 8 மணி வரை திறக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மறு அறிவிப்பு வரும் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments