வைரவியாபாரி மெகுல் சோக்சி இப்போதும் இந்தியக் குடிமகன்தான் என இந்தியா மனு

0 2524

தப்பியோடிய வைரவியாபாரி மெகுல் சோக்சி தற்போது வரை இந்தியக் குடிமகன்தான் என்று டொமினிக்கன் நீதிமன்றத்தில் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது டொமினிக்கன் சிறையில் இருக்கும் மெகுல் சோக்சி, தான் இந்திய குடிமகன் இல்லை என்றும், கடந்த 2018 டிசம்பர் 14ல் குடியுரிமையைக் கைவிட்டு விட்டதாகவும் அந்நாட்டு நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.

இதற்காக அவர் தனது பாஸ்போர்ட்டை கயானாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் சமர்ப்பித்திருந்தார். அவரது பாஸ்போர்ட்டை 2019 ஜனவரியில் பார்த்த இந்திய உள்துறை அமைச்சகம், சோக்சி தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளி என்றும், அவரது பாஸ்போர்ட்டை நிராகரிக்க முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் இந்தியாவுக்கு நாடு கடத்தக் கோரும் வழக்கில், சோக்சி தவறான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments