காதல் டூயட் பாடி ஆசிரமத்தில் பஜனை சிவசங்கரின் லீலைகள்..! ரூ 700 கோடி சொத்து இருக்குதாம்..!

0 6288

தன்னிடம் மாட்டிக் கொண்டுள்ள சிறுமிகளை தேவதைகள் என்று வர்ணித்துள்ள  73 வயது சாமியார் சிவசங்கர் பாபா, கணவனை இழந்த பெண்கள் குறித்தும் அவதூறாக பேசிய வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. தனது அறக்கட்டளை பெயரில் 700 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ள உடான்ஸ் பாபா குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

ஆன்மீக சத் சங்கத்தில் நாய் பாட்டு பாடச்சொல்லும் இவர் தான் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்கில் தேடப்படும் 73 வயது சாமியார் சிவசங்கர்பாபா..!

நடிகர் ஆர்யாவுக்கும், விஷாலுக்கும் வித்தியாசம் தெரியாமல் காதல் பாட்டு பாடும் பஜனை குழுவை வைத்துக் கொண்டு தினமும் ஆசிரமத்தில் சிவசங்கர் அடிக்கும் லூட்டிகள் சொல்லிமாளாது என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்

ஒரு வருடத்திற்கு முன்பு கேளம்பாக்கம் ஆசிரமத்தில் நடந்த சத்சங்கின் போது சுஷில் ஹரி பள்ளியில் தங்கிப்படிக்கும் மாணவ மாணவிகளை வைத்துக் கொண்டு, அரைமணி நேரம் ஆன்மீக உரை என்று சிவசங்கர் அளந்துவிட்ட பொய்கள் ஒவ்வொன்றும் நம்ம கைலாசா நித்திக்கே டப் கொடுக்கும் ரகம்..! ஏனென்றால் இவர் ஏற்கனவே 3 முறை செத்து பிறந்தாராம்..!

கடவுள் அவதார பணியை செய்ய ஆள் இல்லாததால் இவருக்கு 4 வருஷம் ஆயுள் நீட்டிப்பு கொடுத்திருப்பதாக புருடா விட்ட இதே பாபா தான் தற்போது உத்ரகாண்டில் நெஞ்சை பிடித்துக் கொண்டு பம்மி இருக்கிறார் ..!

கணவனை இழந்த கைம்பெண்கள் அனைவருமே வேறு காதலில் விழுந்து குழந்தையை விட்டு சென்று விடுவார்கள் என்பதை அறிந்ததால் தான் ஞானியானதாக வக்கிரச்சிரிப்புடன் கூறுகிறார் ..

தன்னிடம் வந்து மாட்டியிருக்கும் சிறுமிகள் குழந்தைகள் அனைவரும் தேவதைகள் என்றும் அவர்களை சந்திர, சூரியனாக்கி கடவுளாக மாற்றுவேன் என்றும் மூளை சலவை செய்துள்ளார்.

பள்ளி மாணவிகளிடம் அத்துமீறியதற்காக போக்சோ சட்டத்தில் சிக்கி தலைமறைவாகி இருக்கும் சிவசங்கர் பாபா சூரியனாகிறாரோ.. இல்லையோ.. விரைவில் சிபிசிஐடி போலீசாரிடம் சிக்கி கைதாவார் என்று நம்புவோம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments