தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 13,000க்கும் கீழ் சரிந்தது

0 4429
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு, 13 ஆயிரத்திற்கும் கீழாக குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு, 13 ஆயிரத்திற்கும் கீழாக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 12 ஆயிரத்து 772 பேருக்கு, புதிதாக வைரஸ் தொற்று உறுதியானது. நோய் தொற்றில் இருந்து குணம் அடைந்து, ஒரே நாளில் 25 ஆயிரத்து 561பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

கோவையில் ஆயிரத்து 728 பேரும், ஈரோட்டில் ஆயிரத்து 295 பேரும், சென்னையில் 828 பேரும், திருப்பூரில் 781பேரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

24 வயது கிருஷ்ணகிரி இளைஞர், 94 வயது கோவை முதியவர், 98 வயது செங்கல்பட்டு மூதாட்டி உள்பட ஒரே நாளில் கொரோனா பெருந்தொற்றுக்கு 254 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழ்நாடு சுகாதார மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments