ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம், புலம் பெயர் தொழிலாளருக்கு உதவிகரமாக இருக்கும்: உச்ச நீதிமன்ற விசாரணையில் மத்திய அரசு சத்தியபிரமாணம் தாக்கல்

0 2766
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம், புலம் பெயர் தொழிலாளருக்கு உதவிகரமாக இருக்கும்: உச்ச நீதிமன்ற விசாரணையில் மத்திய அரசு சத்தியபிரமாணம் தாக்கல்

ரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம், புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும் எனவும் அதன் மூலம் நாட்டின் எந்த நியாய விலைக்கடைகளில் இருந்தும் அவர்களுக்கு உணவு தானியம் கிடைக்கும் எனவும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு காலத்தில் புலம் பெயர் தொழிலாளர்கள் நேரிடும் பிரச்சனைகள் குறித்து நடந்த வழக்கு விசாரணையில் மத்திய அரசு தாக்கல் செய்த சத்தியபிரமாணத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

புலம் பெயர் தொழிலாளர்கள் தங்களிடம் இருக்கும் ரேஷன் கார்டு மற்றும் பயோமெட்ரிக் அடையாளங்களை வைத்து எந்த ரேஷன் கடையிலும் தங்களுக்கான உணவு தானியங்களை பெறலாம்.

இதற்கான கூடுதல் உணவு தானிய ஒதுக்கீடுகளை பெற்றுக் கொள்ளுமாறு கடந்த மாதம் மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments