தமிழகத்தில் மேலும் 39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

0 4029

செங்கல்பட்டு, கரூர், நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர் உட்பட மேலும் 39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த ஜான் லூயிஸ், உள்துறை இணை செயலாளராகவும், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மேகராஜ் நகராட்சி நிர்வாக இணை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநில மனித உரிமை ஆணைய செயலாளராக திருப்பூர் மாவட்ட ஆட்சியராக இருந்த கார்த்திகேயனும், கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறையின் இணை செயலாளராக திண்டுக்கல் ஆட்சியர் விஜயலட்சுமியும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பத்திர பதிவுத்துறை ஐ.ஜி.யாக இருந்த டாக்டர்.ஷங்கர், தமிழ்நாடு காதி மற்றும் கிராம தொழில் வாரிய தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments