ஹெல்மெட் அணியாமல் சென்று சாலை விபத்தில் சிக்கிய கன்னட நடிகர் மரணம்

0 4875

ஹெல்மெட் அணியாமல் சென்று சாலை விபத்தில் சிக்கிய தேசிய விருது பெற்ற கன்னட நடிகர் சஞ்சாரி விஜய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 38.

ஊரடங்கை மீறி பெங்களூரில் கடந்த சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சஞ்சாரி விஜய், வாகனத்திலிருந்து சறுக்கி விழுந்து படுகாயமடைந்தார்.

இதில் கோமா நிலைக்கு சென்ற விஜய்க்கு, செயற்கை சுவாசம் பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்தாக நடிகர் சுதீப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான நான் அவனள்ள அவளு படத்தில் திருநங்கையாக நடித்து பிரபலமான கன்னட நடிகர் சஞ்சாரி விஜய்க்கு தேசிய விருது கிடைத்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments