குட்டி ரசிகரை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்த ஜோகோவிச்சின் பரிசு..!

0 2823

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நோவக் ஜோகோவிச், மைதானத்திலிருந்த தனது குட்டி ரசிகருக்கு பரிசு அளித்து திக்குமுக்காட வைத்த வீடியோ வைரலாகிவருகிறது.

கிரீஸ் வீரர் சிட்சிபாஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற பின், பார்வையாளர்களை நோக்கிவந்த ஜோகோவிச், தான் பயன்படுத்திய டென்னிஸ் ராக்கெட்டை அங்கிருந்த சிறுவனுக்கு வழங்கினார். இதனை சற்றும் எதிர்பார்க்காத அச்சிறுவன், செய்வதறியாது மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தான்.

போட்டி முடியும் வரை அச்சிறுவனின் குரல் தன் காதில் ஒலித்துக்கொண்டே இருந்ததாகவும், தன்னை ஊக்கப்படுத்தியதுடன் பல்வேறு வியூகங்களை தனக்கு கற்றுக்கொடுத்த சிறுவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்திலேயே ராக்கெட்டை பரிசாக அளித்ததாகவும் ஜோகோவிச் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments