சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய அதிமுகவினர் 15 பேர் கட்சியில் இருந்து நீக்கம்: ஓபிஎஸ் - இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு

0 8884

சிகலாவுடன் தொலைபேசியில் உரையாடியவர்கள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று அதிமுக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு 15 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், தேர்தலுக்கு முன்பாக, அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப் போவதாக அறிவித்த சசிகலா, அதிமுகவை அபகரிக்கும் முயற்சியில் இறங்கப்போவதாக ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் சிலருடன் பேசுவதும், அதை ஊர் அறிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதுமாக வினோத நாடகத்தை அரங்கேற்றி வருவதாகவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடியவர்கள், இனி உரையாடுபவர்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி எம்.ஆனந்தன், ஈரோடு வி.கே.சின்னச்சாமி உள்ளிட்ட 15 நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments