கள்ளக்குறிச்சியில் மகன் இறந்த செய்தியை கேட்ட அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு

0 3990

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அருகே மகன் இறந்த செய்தியை கேட்ட அதிர்ச்சியில் தந்தையும் உயிரிழந்தார்.

மேலந்தல் கிராமத்தை சேர்ந்த காசிநாதன் நேற்று அதிகாலை தனது விவசாய நிலத்திற்கு சென்றார். அப்போது, அவரது நிலத்திற்கு அருகே பாஸ்கர் என்பவர் சட்டவிரோதமாக அமைத்திருந்த மின்வேலியில் சிக்கி காசிநாதன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதனையறிந்த பாஸ்கர், காசிநாதனின் உடலை புதருக்குள் மறைத்துவைத்து தற்கொலை என நாடகமாட முயற்சித்துள்ளார். ஆனால் திடீரென இரவோடு இரவாக மணலூர்பேட்டை காவல்நிலையத்திற்கு சென்ற பாஸ்கர், நடந்ததை கூறி சரணடைந்தார். முட்புதருக்குள் இருந்து காசிநாதனின் உடலை மீட்ட போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.காசிநாதன் இறந்ததை அறிந்த அவரது தந்தை சுப்ரமணியம் மாரடைப்பால் உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments