3 ஆம் அலையை எதிர்கொள்ள தயாராகிறது மத்திய அரசு..! நாடு முழுதும் 50 நவீன மாடுலார் மருத்துவமனைகளை அமைக்க திட்டம்

0 139130
3 ஆம் அலையை எதிர்கொள்ள தயாராகிறது மத்திய அரசு..! நாடு முழுதும் 50 நவீன மாடுலார் மருத்துவமனைகளை அமைக்க திட்டம்

3 ஆவது அலையால் கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டால், அதை சமாளிக்க நாடு முழுதும் 50 நவீன மாடுலார் மருத்துவமனைகளை இரண்டு அல்லது 3 மாதங்களுக்குள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தற்போது உள்ள மருத்துவமனைகளின் அருகே 3 கோடி ரூபாய் செலவில் ஐசியூ வசதியுடன் 100 படுக்கைகள் வரை உள்ள தலா 50 மாடுலார் மருத்துவமனைகள் அரசு மற்றும் இலவச மருத்துவமனைகளை ஒட்டி அமைக்கப்படும்.

சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் கொரோனாவுக்கு எதிரான மருத்துவ வசதியை மேம்படுத்தும் நோக்கில் இவை அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் முதலில் இவை ஏற்படுத்தப்படும்.

25 ஆண்டுகள் வரை பயன்படுத்தக்கூடிய இந்த மாடுலார் மருத்துவமனைகளை தேவைப்படும் இடங்களுக்கு எளிதாக கொண்டு செல்லலாம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments