அதானி குழுமத்தின் ரூ.43,500 கோடி மதிப்புள்ள பங்குகளை வைத்துள்ள 3 வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் கணக்குகள் முடக்கம்

0 28642

தானி குழுமத்தின் 43 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை வைத்துள்ள 3 வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

மொரீசியஸ் தலைநகர் போர்ட் லூயிசில் உள்ள Albula Investment Fund, Cresta Fund, APMS Investment Fund ஆகியன அதானி குழுமத்தில் உள்ள 4 நிறுவனங்களின் பத்து விழுக்காட்டுக்கும் குறைவான பங்குகளை வைத்துள்ளன.

அவற்றின் உரிமையாளர், அதனால் பயன்பெறுவோர் உள்ளிட்ட விவரங்களை அளிக்காததாலும், 3 நிறுவனங்களும் ஒரே முகவரியில் உள்ளதாலும் தேசியப் பங்குகள் வைப்பகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதனால் அந்த 3 நிறுவனங்கள் இப்போது வைத்துள்ள பங்குகளை விற்கவோ, புதிய பங்குகளை வாங்கவோ முடியாது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments