தனியார் பள்ளி வசம் இருந்த ரூ.140 கோடி மதிப்புள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான 32 ஏக்கர் நிலம் மீட்பு..!

0 4232
தனியார் பள்ளி வசம் இருந்த ரூ.140 கோடி மதிப்புள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான 32 ஏக்கர் நிலம் மீட்பு..!

னியார் பள்ளி வசம் இருந்த காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான 140 கோடி ரூபாய் மதிப்புடைய 32 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.

சென்னை கீழ்ப்பாக்கம் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சீதா கிங்ஸ்டன் எனும் தனியார் பள்ளி செயல்பட்டு வந்தது. 1969 ம் ஆண்டு முதல் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் குத்தகைக்கு செயல்பட்டு வந்த சீதா கிங்ஸ்டன் பள்ளியின் குத்தகைகாலம் நிறைவடைந்த நிலையில், குத்தகை பணம் தொடர்பான வழக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கு நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் கோயில் நிர்வாகத்துக்கு சாதகாமான தீர்ப்பு பெறப்பட்டதை அடுத்து, பள்ளி நிர்வாகம் வசமிருந்த 32 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சீதா கிங்ஸ்டன் பள்ளியை மூடுவதாக பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளதால், இந்த நிலத்தை மறு குத்தகைக்கு விட்டு புதிய அறக்கட்டளை நிர்வாகம் மூலம் பள்ளியை தொடர்ந்து நடத்தலாமா அல்லது மறு பயன்பாட்டிற்கு கொண்டுவரலாமா என்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments