முதலமைச்சர் மற்றும் முன்னாள் முதலமைச்சர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக கிஷோர் கே சுவாமி என்ற நபர் கைது: சிறையில் அடைப்பு

0 6390

முதலமைச்சர் மற்றும் முன்னாள் முதலமைச்சர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக, கிஷோர் கே ஸ்வாமி என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டு வரும் இந்த நபர், பேரறிஞர் அண்ணா, கலைஞர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக, புகார் அளிக்கப்பட்டது.

கலவரத்தை தூண்டுதல், அரசுக்கு எதிராக செயல்பட தூண்டும் வகையில் அல்லது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்தி பரப்புவது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பின்னர் கிஷோர் கே ஸ்வாமியை கைது செய்த போலீசார் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments