தமிழகத்தில் 11ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான சேர்க்கை துவங்கியது.....! ஒன்பதாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பாடப்பிரிவுகள் ஒதுக்கீடு

0 2871
தமிழகத்தில் 11ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான சேர்க்கை துவங்கியது.....! ஒன்பதாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பாடப்பிரிவுகள் ஒதுக்கீடு

மிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.

வழக்கமாகப் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெறும். கடந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வு நடத்தவில்லை என்பதால் 2019 - 2020 கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

ஒவ்வொரு பாடப் பிரிவிலும் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விடக் கூடுதலாக 15 விழுக்காடு மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள இந்த ஆண்டு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் ஏழரை விழுக்காடு உள் ஒதுக்கீடு உள்ளதால் முந்தைய ஆண்டுகளை விட இந்த ஆண்டு உயிரியல் பாடப்பிரிவைத் தேர்வு செய்ய அதிகமானோர் ஆர்வம் காட்டுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments