தனது குழந்தையை அனாதை என கூறி நாடகம் - தந்தை உள்பட இருவர் கைது

0 2078

தனது குழந்தையையே அனாதை என கூறி நாடகமாடிய நபர் உள்பட இருவர் சிவகங்கையில் கைது செய்யப்பட்டனர். 

உசிலம்பட்டி அடுத்த எருமாரப்பட்டியைச் சேர்ந்த ஆனந்தகுமார்- சுபாஷினி தம்பதி பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், அவர்களின் 6 மாத பெண்குழந்தையை ஆனந்தகுமார் விருப்பமின்றி வளர்த்து வந்துள்ளார்.

இதையடுத்து உறவினர்கள் இருவரின் உதவியுடன், சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற ஆனந்தகுமார், காரில் தாங்கள் வந்தபோது சாலையில் அழுதுகொண்டிருந்ததாகக் கூறி கையில் வைத்திருந்த குழந்தையை ஒப்படைத்துள்ளார்.

குழந்தையைப் பெற்றுக் கொள்ள வந்த குழந்தைகள் நலக் குழுவினர் நடத்திய விசாரணையில் உண்மை தெரிய வந்ததை அடுத்து, ஆனந்தகுமார் உள்ளிட்ட 2பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான பெரியசாமி உள்பட 2பேரைத் தேடிவருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments