தமிழகத்தில் 3 இடங்களில் 100 ரூபாயை தாண்டிய பெட்ரோல் விலை

0 5120

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் மற்றும் குமராட்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டியுள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியது.

இந்த நிலையில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில், குமாராட்சி ஆகிய இடங்களிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டியுள்ளது. காட்டுமன்னார்கோவிலில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100ரூபாய் 17 காசுகளாகவும், குமராட்சியில் 100 ரூபாயாகாவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பகுதிகளுக்கு பெட்ரோல், டீசலை கொண்டு செல்லும் போக்குவரத்து செலவு அதிகம் என்பதால் விலை 100 ரூபாயை எட்டியுள்ளது.

கொடைக்கானலில் இன்றைய நிலவரப்படி, பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்து 100ரூபாய் 30காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 28 காசுகள் உயர்ந்து 94ரூபாய் 20 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments