நாடு முழுவதும் 72 நாட்களில் இல்லாத வகையில் குறைந்த கொரோனா

0 4519

கடந்த 72 நாட்களில் மிகவும் குறைந்த எண்ணிக்கையாக, கடந்த 24 மணி நேரத்தில் 70 ஆயிரத்து 421 பேருக்கு மட்டுமே புதிதாக கொரோனா தொற்று உறுதியானது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.    

24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 3 ஆயிரத்து 921 பேர் பலியாகினர். நோய் தொற்றில் இருந்து குணமாகி ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 501 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.  நாடு முழுதும், நோய் தொற்று பாதித்து மருத்துவமனைகளிலும், வீட்டுத் தனிமையிலும் இருப்போர் எண்ணிக்கையும் சுமார் 9 லட்சத்து 73 ஆயிரமாக குறைந்துள்ளது.  இதுவரை   25 கோடியே 48 லட்சத்து 49 ஆயிரத்து 301 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

24 மணிநேரத்தில் தமிழ்நாட்டில் 14 ஆயிரத்து 16 பேருக்கு நோய் தொற்று உறுதியானது. மகாராஷ்டிராவை பொறுத்தவரை நோய் தொற்று 10 ஆயிரத்து 442 ஆகவும்  கேரளாவில் 11 ஆயிரத்து 584 பேருக்கு தொற்று உறுதியானது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments