யூரோ கால்பந்து தொடரில் உக்ரைன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நெதர்லாந்து வெற்றி

0 2472

யூரோ ஆண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் உக்ரைன் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து வெற்றி பெற்றது.

ஆம்ஸ்டர்டெம் மைதானத்தில் நடந்த சி பிரிவு லீக் ஆட்டத்தில் உக்ரைன், நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்காததால் 2-ஆம் பாதியில் விறுவிறுப்பு தொற்றிக் கொண்டது.

விறுவிறுப்பாக தொடங்கிய 2-ஆம் பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் அடுத்தடுத்து கோல்களை திருப்பி 2-க்கு 2 என சமன் செய்தனர். உச்சக்கட்ட பரபரப்பாக நடந்த ஆட்டத்தின் 85-வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் Dumfries கோல் திருப்பி அணியின் வெற்றியை உறுதி செய்தார். முடிவில் 3-2 என்ற கோல் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றது.

முன்னதாக இதே சி பிரிவில் ரூமேனியாவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் வடக்கு மசடோனியா அணியை 3-க்கு 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரியா அணி வென்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments