கொரோனாவின் உருமாறிய டெல்டா பிளஸ் மிகவும் ஆபத்தானது - மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

0 3641

கொரோனாவின் உருமாறிய டெல்டா பிளஸ் மிகவும் ஆபத்தானது என்றும் அது நோய் எதிர்ப்பு சிகிச்சையை முறியடிக்கக் கூடியது என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.இவ்வகை கொடிய டெல்டா பிளஸ் வைரஸ் இந்தியாவில் 6 பேரிடம் கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து இந்தியாவில் இருந்து பரவிய வகைமைக்கு டெல்டா வைரஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.அதன் அதி தீவிர உருமாறிய வடிவம் தான் டெல்டா பிளஸ் என்று அழைக்கப்படுகிறது. இது குறித்து இங்கிலாந்தின் பொது சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் இந்த டெல்டா பிளஸ்ஸின் தீவிரம் விளக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டெல்லியில் கருத்து தெரிவித்த மருத்துவ நிபுணர்கள் இந்த வகை கலப்பு கொரோனா வைரஸ் நோய் எதிர்ப்பு சக்திகளை முறியடிப்பதாக கூறப்படும் நிலையில் இரண்டு மருந்துகளுக்கு கட்டுப்படுவதாக தெரிவித்தனர்.

Casirivimab, Imdevimab ஆகிய இரண்டு மருந்துகளின் கலப்பு மருந்தை அவசர கால பயன்பாட்டுக்குப் பயன்படுத்த மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் அனுமதி கிடைத்திருப்பதாகவும் நிபுணர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments