ஜார்கண்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை

0 2654

ஜார்கண்ட் மாநிலத்தில் கொரோனா தொற்று இரண்டாம் அலையில் முதன்முறையாக உயிரிழப்பு இல்லாத நாள் ஏற்பட்டுள்ளது.

அந்த மாநிலத்தில் தற்போது 4 ஆயிரம் பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 239 பேருக்கு புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டது.

இதுவரை மாநிலம் முழுவதும் 3 லட்சத்து 43 ஆயிரம் பேருக்கு தொற்று வந்துள்ளதாகவும், இவர்களில் 3 லட்சத்து 34 ஆயிரம் பேர் சிகிச்சைக்குப் பின் மீண்டுள்ளதாகவும் ஜார்கண்ட் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக நேற்று எந்த உயிரிழப்பும் அந்த மாநிலத்தில் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments