4 நாட்கள் 2 குழந்தைகளை பூட்டி வைத்து விட்டு மது விருந்துக்கு சென்ற தாய்... பசியால் 11 மாத குழந்தை உயிரிழந்த சோகம்

0 7583

ரஷ்யாவில் தாய் ஒருவர் 4 நாட்கள் வீட்டில் இரண்டு குழந்தைகளை பூட்டி வைத்து விட்டு மது விருந்துக்கு சென்றதால், பசியால் 11 மாத குழந்தை உயிரிழந்துள்ளது.

கணவனை பிரிந்து வாழும் 25 வயதான வோல்கா பஜிராவோ என்ற பெண், நண்பர்களுடன் மதுபான விருந்தை அனுபவிக்க 11 மாத மகனையும், 3 வயது மகளையும் வீட்டில் வைத்து பூட்டி விட்டு சென்றுள்ளார். 4 நாட்களுக்கு பின் வந்து பார்த்தபோது, பசியால் 11 மாத குழந்தை இறந்ததுடன், 3 வயது மகளும் பட்டினியால் பலவீனமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து குழந்தைகளின் பாட்டி அளித்த புகாரின் பேரில், தாயின் கடமையை செய்ய தவறியதற்காக அந்த பெண்ணுக்கு, அந்நாட்டு நீதிமன்றம்14 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments