தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 14,016 பேருக்கு கொரோனா பாதிப்பு; 25,895 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

0 3076

மிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு, 15 ஆயிரத்திற்கும் கீழாக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 14 ஆயிரத்து 16 பேருக்கு, புதிதாக வைரஸ் தொற்று உறுதியானது. நோய் தொற்றில் இருந்து குணம் அடைந்து, ஒரே நாளில் 25 ஆயிரத்து 895 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

கோவையில் ஆயிரத்து 895 பேரும், ஈரேட்டில் ஆயிரத்து 323 பேரும், சென்னையில் 935 பேரும், திருப்பூரில் 820 பேரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.12 வயது கோவை சிறுமி, 94 வயது சென்னை முதியவர், 95 வயது கோவை மூதாட்டி உள்பட ஒரே நாளில் கொரோனா பெருந்தொற்றுக்கு 267 பேர் உயிரிழந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments