கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய விசாரணைக்கு சீனா ஒத்துழைக்க வேண்டும் என உலக நலவாழ்வு அமைப்புத் தலைவர் வலியுறுத்தல்

0 2776

கொரோனா வைரசின் தோற்றம் குறித்த விசாரணைக்குச் சீனா ஒத்துழைக்க வேண்டும் என உலக நலவாழ்வு அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கிப்ரயீசஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா வைரசின் தோற்றம் குறித்துக் காலவரைக்குட்பட்டு வெளிப்படையான, சான்றுகளின் அடிப்படையிலான சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் எனப் பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

ஜி 7 நாடுகள் கூட்டத்திலும் இந்தக் கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய உலக நலவாழ்வு அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கிப்ரயீசஸ், கொரோனா வைரசின் தோற்றம் பற்றி நடைபெற்று வரும் விசாரணைக்குச் சீனா ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினார்.

இயற்கையாக கொரோனா வைரஸ் பரவியதா அல்லது ஊகான் ஆய்வகத்தில் இருந்து பரவ விடப்பட்டதா என்பதை ஆராய வேண்டும் என அறிவியலாளர்களும், உலகத் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments