காதலில் பிரச்னை : 12 ஆம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு காதலன் தற்கொலை

0 22935

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 12ஆம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு, அவரது காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

வாணியம்பாடியை சேர்ந்த அந்த மாணவியும் அதே பகுதியைச் சேர்ந்த சசிக்குமார் என்ற இளைஞனும் காதலித்து வந்தனர் என்று கூறப்படுகிறது. நேற்றிரவு மாணவியின் வீட்டருகே உள்ள மைதானத்துக்கு அவரை வரவழைத்து பேசிக் கொண்டிருந்தபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது தான் மறைத்துவைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடிய சசிக்குமார், வீட்டுக்குச் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கத்தியோடு சசிக்குமார் ஏன் அங்கு வரவேண்டும், திட்டமிட்ட கொலை முயற்சியா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments