இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு குறித்து தி எக்கனாமிஸ்ட் இதழ் கட்டுரையில் வெளியான தகவல் தவறானது - மத்திய அரசு

0 3328

இந்தியாவில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு, புள்ளி விவரத்தில் உள்ளதைவிட ஐந்து முதல் ஏழு மடங்கு அதிகமாக இருக்கும் என வெளியான தகவல் அடிப்படையற்றது தவறான தகவல் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தி எக்கனாமிஸ்ட் செய்தித்தாளில் வெளியான கட்டுரையில் இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு அரசின் புள்ளி விவரங்களில் தெரிவித்துள்ளதைவிட ஐந்து முதல் ஏழு மடங்கு அதிகமாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்தச் செய்தியை மறுத்துள்ள இந்திய அரசு, எந்தவொரு ஆதாரமும் இன்றித் தரவைப் பெரிதாக்கிக் கணக்கிட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது. எந்த அடிப்படையுமின்றி ஊகத்தில் தவறான தகவலை வெளியிட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments