யூரோ கால்பந்தாட்ட போட்டியை பீருடன் கண்டுகளித்த ரசிகர்கள்... ஒவ்வொரு கோலுக்கும் 100லிட்டர் பீர் இலவசம்

0 3584

உக்ரைனில் உள்ள பார் ஒன்றில், யூரோ கால்பந்தாட்ட போட்டியில், ரஷ்யாவுக்கு எதிராக பெல்ஜியம் அடித்த ஒவ்வொரு கோலுக்கும் பீர் இலவசமாக வழங்கப்பட்டது.

ரஷ்யாவிலுள்ள செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் மைதானத்தில், ரஷ்யா- பெல்ஜியம் இடையிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டிகள் உக்ரைனின் எல்விவ் நகரிலுள்ள பார் ஒன்றில் பெரிய திரைகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன.

அப்போது ரஷ்யாவுக்கு எதிராக பெல்ஜியம் அடித்த ஒவ்வொரு கோலுக்கும் 100 லிட்டர் பீர் இலவசமாக வழங்கப்பட்டது. போட்டியின் முடிவில் பெல்ஜியம் அணியின் நட்சத்திர வீரர் லுகாகுவின் அபாரமான ஆட்டத்தால் ரஷ்யாவை 3-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் வீழ்த்தியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments